சரித்திரமாய் வாழ்ந்த சகாப்தம்!
சகாப்தம் தந்த சரித்திரம்!
(வீர)சிவாஜி கண்டது 'இந்து சாம்ராஜ்யம்',
சினிமா கண்டது சிவாஜி ராஜ்யம்.
'பராசக்தி'யின் தவ புதல்வன்.,
காங்கிரஸ் தோட்டத்தில்
கர்மவீரர் கண்டெடுத்த 'பாசமலர்',
கர்மவீரர் கண்டெடுத்த 'பாசமலர்',
இவர் விழுப்புரம் சின்னைய்யா தந்த
'வீரபாண்டிய கட்டபொம்மன்'
'வீரபாண்டிய கட்டபொம்மன்'
தான் கொண்ட பாத்திரங்களில்
'பாழும் பழமும்' ஏந்தி வந்த
'படிக்காத மேதை'
'பாழும் பழமும்' ஏந்தி வந்த
'படிக்காத மேதை'
'சிவந்த மன்னில்' நடந்த 'உயர்ந்த மனிதன்'
நீ 'தேவர் மகன்' ஆனாலும் 'தெய்வ மகன்'
'பழனி' விபூதி பூசிய ''இரத்தத் திலகம்''
'திரிசூலம்' ஏந்தாமல் நீ ஆடிய 'திருவிளையாடல்'கள்
'பார்த்தாலே பசி தீரும்'
'பார்த்தாலே பசி தீரும்'
'பச்சை விளக்கு'ம் 'பாவை விளக்கு'ம் பூஜித்த
எங்கள் 'கப்பல் ஓட்டிய தமிழன்'
எங்கள் 'கப்பல் ஓட்டிய தமிழன்'
'படையப்பா'விற்க்கும் பாடம் நடத்தியது
அந்த 'ஆண்டவன் கட்டளை'
அந்த 'ஆண்டவன் கட்டளை'
நீ 'கர்ணனை' கண்ணில் காட்டிய
'ராஜ ராஜ சோழனே'
'ராஜ ராஜ சோழனே'
'அவன் தான் மனிதன்' என்று
எல்லொரும் போற்றிய 'பலே பாண்டியா'!
எல்லொரும் போற்றிய 'பலே பாண்டியா'!
ஷெவாலியே கண்ட சிம்மகுரலோனே
எல்லாம் அந்த 'கந்தன் கருணை'!
எல்லாம் அந்த 'கந்தன் கருணை'!
அந்த நடிப்புலக திலகத்திற்க்கு என்றும்
எங்கள் "முதல் மரியாதை".
எங்கள் "முதல் மரியாதை".
No comments:
Post a Comment