Friday, November 22, 2013

என் உலகம்


 


தேன் மழை பொழியும் வானம்
தேவதைகளுடன்  பழகும் நட்பு
புலிமேல் சவாரி
 பூகம்பமே இல்லை !
பஞ்சம் என்றால் என்ன ?
பாவம் என்பதே இல்லை
கவலை  என்பதும் இல்லை
களவை  காண முடியாது!
காமம் அளவுக்கதிகமாய் கிடையாது !
கஞ்சம் காணா கர்ணன் குணம்  !
பறவைக்கும் சிம்மாசனம்  !
பாவிக்கும் மன்னிப்பு
எதிரிக்கும் என் அன்பு...
துரோகிக்கு தூக்கு தண்டனை
கல்விக்கும் வேலை உண்டு
காதல்  கட்டாயம் உண்டு...
கேலி கூத்து பொழுதுபோக்கு
ஆனால் கேவலம் காண முடியாது ...
பாம்புக்கும் பறக்கும் சக்தி
பகலில் ஆந்தைக்கும் விழிக்கும் சக்தி
சொந்தமே கிடையாது
தந்தையும் நண்பனே ...
நட்பு ஒன்றே உண்டு
இடையில் கடவுளும் உண்டு
யேசுதாஸ் குரலே அலாரம்
கிரிக்கெட்டும் உண்டு
தூய்மை எங்கும் காணலாம்
வெள்ளை கொடி
சிவப்பின் வேகம்
பச்சையின் பசுமை கொண்டதே
என் உலகம் ...

ஜாதிகளை தேடினாலும்
காண இயலாது
மூலதெய்வம் அண்ணா ..
மதம் அப்படி ஒன்றே கிடையாது ...
பணம் இல்லை பண்டமாற்றம் உண்டு
ஏழையை தேடவேண்டும் !
எள்ளுக்கும் யானை உருவம்
எலிக்கும் தெனாலி உருவம்
எனக்கும் கிடையாது உனக்கும் கிடையாது
நமக்கு மட்டுமே எதுவும் உண்டு  !
சண்டை சச்சரவு கிடையாது
சாவு  என்ற சொல் கொடுஞ்சொல்
சமரசமே சம்பர்தாயம்
இரண்டே இனம்
இன்பம் மட்டும் கொண்டதே
என் உலகம்...

தமிழே  உலக மொழி
ஆங்கிலமும் உண்டு
திருக்குறளே புனித நூல்
கண்ணதாசனே சிறந்த கவிஞன்
அரசியலே கிடையாது
ஆன்மிகம் உண்டு
குயில் குரலே சுப்ரபாதம்
வயல்களில் தங்கம் விளையும்
பசி என்ற சொல்லே கிடையாது
பரதேசியை பார்க்க முடியாது
கட்டுப்பாடே கிடையாது
என் உலகில்...

நோயே கிடையாது
ஏனென்றால் எமனே காவலன்
கோவிலே கிடையாது - அனாதை
குழந்தைகள் கிடையாது
பிரிவினை இல்லை - தனித்தனி
நாடுகள் இல்லை - என் உலகில்

பாவம் புண்ணியம் கிடையாது
பூசல் கிடையாது
மகிழ்ச்சி மட்டுமே உண்டு
 கேள்விகள் கிடையாது
பதில் மட்டுமே உண்டு- என்றும்
சுதந்திர உலகமே என் உலகம்
அதுவே புதியதோர் உலகம்

அந்த புதியதோர் உலகை நோக்கி
என் பயணம்...









No comments:

Post a Comment