விடிய விடிய
அவசர அவசரமாய்
அமெரிக்க சேவை செய்யும் எனக்கு
இன்று இரவில் உறங்க வாய்ப்பு...
கண் அயர்ந்தேன்..
கனா கண்டேன்..
வெள்ளை உடையில்
நடந்து வந்தது அந்த
"கருப்பு தீபம்".
கனவில் வந்தார் வைரமுத்து.
பிள்ளாய் நலமா? என்றார்
தலையசைத்தேன், நான்.
பேசமாட்டாயா? என்றார்
பிரம்மிப்பு! என்றேன் நான் - அந்த
கருப்பு தாடைகளுக்கு நடுவே
வெள்ளை புதையல் காட்டினார்.
உங்கள் கவிதைகளுக்கு நான் அடிமை என்றேன்
அடிமைகளை நான் விரும்புவதில்லை என்றார்...
உங்கள் விருப்பு பெற என்ன பரிகாரம் என்றேன்.
அந்த கள்ளிகாட்டு கண்ணனின்
கீதோபதேசம் தொடங்கியது,
எடு கணை
தொடு வினை
உன் குண்டு குண்டு எழுத்துகளால்
இளைத்து போன இந்த தேசத்துக்கு
தீனி போடு...
மட்கும் குப்பையை எழுது...
மயக்கும் கன்னியை எழுது...
கருவறை கண்டு
ஆனந்தம் பாடு...
மயானம் தொட்டு
கண்ணீரை செதுக்கு...
உன் மூளை பெட்டிக்குள் முடிந்து வைத்த சிந்தனைகளை
அவிழ்த்து கொட்டு
அது மேடு பள்ளம் பாராமல்
காட்டாறாய் ஓடட்டும்
குறைவாய் பேசு
அதிகமாய் படி
அளவுக்கதிகமாய் எழுது.
காதலியோடு கோபமா ?
கவிதை எழுது
காசில்லா நேரமா?
கவிதை எழுது
சிந்திக்க முடியவில்லையா?
அதை எழுது
இன்று சிரிக்கவில்லையா?
அதையும் எழுது...
எழுத்து என்பது
இறைவனின் கொடை - அது
ஒரு புரட்சிப்படை
மனிதனின் அற்புத கண்டுபிடிப்பு- ஆதலால்
எழுது
எழுது
எழுதிக்கொண்டே இரு
உன் எழுத்துக்கள்
அத்யாவசியமாய் இல்லாவிடினும்
அனாவசியமாய் போய் விட கூடாது.
முடித்தார்,
விழித்தேன்,
எழுதினேன்...
கருப்பு தீபத்துக்கு சமர்ப்பணம்.
அவசர அவசரமாய்
அமெரிக்க சேவை செய்யும் எனக்கு
இன்று இரவில் உறங்க வாய்ப்பு...
கண் அயர்ந்தேன்..
கனா கண்டேன்..
வெள்ளை உடையில்
நடந்து வந்தது அந்த
"கருப்பு தீபம்".
கனவில் வந்தார் வைரமுத்து.
பிள்ளாய் நலமா? என்றார்
தலையசைத்தேன், நான்.
பேசமாட்டாயா? என்றார்
பிரம்மிப்பு! என்றேன் நான் - அந்த
கருப்பு தாடைகளுக்கு நடுவே
வெள்ளை புதையல் காட்டினார்.
உங்கள் கவிதைகளுக்கு நான் அடிமை என்றேன்
அடிமைகளை நான் விரும்புவதில்லை என்றார்...
உங்கள் விருப்பு பெற என்ன பரிகாரம் என்றேன்.
அந்த கள்ளிகாட்டு கண்ணனின்
கீதோபதேசம் தொடங்கியது,
எடு கணை
தொடு வினை
உன் குண்டு குண்டு எழுத்துகளால்
இளைத்து போன இந்த தேசத்துக்கு
தீனி போடு...
மட்கும் குப்பையை எழுது...
மயக்கும் கன்னியை எழுது...
கருவறை கண்டு
ஆனந்தம் பாடு...
மயானம் தொட்டு
கண்ணீரை செதுக்கு...
உன் மூளை பெட்டிக்குள் முடிந்து வைத்த சிந்தனைகளை
அவிழ்த்து கொட்டு
அது மேடு பள்ளம் பாராமல்
காட்டாறாய் ஓடட்டும்
குறைவாய் பேசு
அதிகமாய் படி
அளவுக்கதிகமாய் எழுது.
காதலியோடு கோபமா ?
கவிதை எழுது
காசில்லா நேரமா?
கவிதை எழுது
சிந்திக்க முடியவில்லையா?
அதை எழுது
இன்று சிரிக்கவில்லையா?
அதையும் எழுது...
எழுத்து என்பது
இறைவனின் கொடை - அது
ஒரு புரட்சிப்படை
மனிதனின் அற்புத கண்டுபிடிப்பு- ஆதலால்
எழுது
எழுது
எழுதிக்கொண்டே இரு
உன் எழுத்துக்கள்
அத்யாவசியமாய் இல்லாவிடினும்
அனாவசியமாய் போய் விட கூடாது.
முடித்தார்,
விழித்தேன்,
எழுதினேன்...
கருப்பு தீபத்துக்கு சமர்ப்பணம்.
No comments:
Post a Comment