கண்ணோடு கண் பேச,
கரங்களோடு கரம் இணையும்
அந்த நேரம் மகிழ்ச்சி...
கூந்தல் முடி இழுத்து- தலையில் குட்டி
தண்ணீர் துடைத்த
அந்த நேரம் மகிழ்ச்சி...
மழையோடு காவிரியில் மண் அள்ளி
பூசிக்கொண்டு உடல் நனைத்த
அந்த நேரம் மகிழ்ச்சி...
இரவோடு இரவாக,
இளங்காத்து வரவாக,
இமை மூட தயாராகும்
அந்த நேரம் மகிழ்ச்சி...
கை கொண்ட கரியோடு,
கணவனின் சட்டை மாட்டும்
கணிமகளைக் கண்ட
அந்த நேரம் மகிழ்ச்சி...
மகிழ்ச்சிகளை குவியலாக்கி,
மலைபோல உருவாக்கி,
ஒட்டு மொத்த தானம்
மழலை அழுத
அந்த நேரம் மகிழ்ச்சி...
No comments:
Post a Comment