ஓ நாணல்களே!
ஒரு முறை தலையாட்டுங்கள்
நான் கவிதை எழுதப் போகிறேன்...
நாணல் தலையசைக்க, கையில் கவிதை!
ஓ மேகங்களே!
ஒரு முறை தூறல் போடுங்கள்
நான் நீராட போகிறேன்...
மேகம் மழை தூவ, நீரோடு தேகம்!
ஓ குயில்களே!
ஒரு முறை கூவுங்கள்
நான் பாட போகிறேன்...
குயில் மகள் கூவ, குட்டி ராகம் என் நாவில்!
ஓ இளங்காற்றே!
ஒரு முறை வீசு
நான் ஓய்வெடுக்க போகிறேன்...
இளமகன் இளைப்பாற, இளங்காற்றின் தாலாட்டு!
ஓ செந்தமிழே!
ஒரு முறை கவிதை சொல்
நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்...
செந்தமிழ் கவி பாட, சொர்கத்தை நோக்கி நான்...!
No comments:
Post a Comment