தாயோடு விளையாடி அவள் சேலையில் ஒளிந்து கொள்ள.,

நெய்யூற்றி சோறு பிசைந்து நிலாச்சோறு நான் உன்ன
ஆசைப்படுகிறேன்...
ஆசைப்படுகிறேன்...
நேசம் நிறைந்த நட்போடு நாளெல்லாம் ஊர் சுற்ற ...
அணுவுக்குள் அணுவைத் தேடி ஆராய்ச்சி மேற்கொள்ள
ஆசைப்படுகிறேன்...
குற்றாலம் அருவியிலே தினமும் நீராட.,
நீரோடை மேலே என் பாவங்கள் கரைந்தோட ஆசைப்படுகிறேன்....
ஆசைப்படுகிறேன்...
குற்றாலம் அருவியிலே தினமும் நீராட.,
நீரோடை மேலே என் பாவங்கள் கரைந்தோட ஆசைப்படுகிறேன்....

செங்கற்கள் துகள் அள்ளி பல் துலக்கி வாய் கழுவ.,
சேற்று வயல் நடந்து நான் நாற்று நட ஆசைப்படுகிறேன்...
நடுங்கும் குளிரில் அவளுடன் நெருப்பை கட்டி அணைக்க.,
சிறுவர் குழாம் நானும் பம்பரம் சுற்ற ஆசைப்படுகிறேன்...
ஆடுகள் பல ஓட்டி ஹேய் ஹேய் என்று சொல்ல.,
அழகாய் அதனுடன் பழைய சோறு நான் தின்ன
ஆசைப்படுகிறேன்...
ஆசைப்படுகிறேன்...
தங்கைக்கு சடை பின்னி காதோரம் பூ வைக்க.,
நான் தாயோடு மடி சாய்ந்து கண்ணீர் விட ஆசைப்படுகிறேன்...
காதலோடு நட்பிலும் பேதமின்றி நடந்து கொள்ள.,
காதலோடு நட்புக்கும் எடுத்துக்காட்டாய் நான் இருக்க...
ஆசைப்படுகிறேன்...
No comments:
Post a Comment