புரியத்தான் எழுதுகிறேன்
புரியாமல்
நாம் புரிந்து புரிந்து
அறிந்ததெல்லாம்
இன்று நமக்கு ஏனோ
புரியாமலேயே போய்விட்டது
புறந்தள்ளி வைத்ததுதான் இன்று
புரிய புரிய தொடருகிறது...
நாம் புரிந்து மறந்தவையும்
மறந்து பின் புரிந்தவையும்
நம்முள் அடங்கும்
இதை புரிந்துதான் கூறுகிறேன்.
புரியாமல் போனால்
புரிய முயற்சி செய்
புரிய முயற்சி செய்
புரிந்து விட்டால் மறக்க முயற்சி செய்
இந்த சந்தர்ப்பவாதியை அல்ல...
No comments:
Post a Comment