நான் உறங்கும்போது விழித்திருந்த சமயம்,
ச்சே! பாவி மகன்
நான் நடந்து வந்த பாதையின் சுவடுகளில் ஏதோ ஒரு சுதந்திரம்!
அது இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் ஆட்டம் போட்டது...
நான் உற்று நோக்கிய திசையெல்லாம் பனித்துகள்கள்.,
வாணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து கொண்டிருந்தது.
என் செவிகளில் நுழைந்தது கானம்,
அதை என்னால் ரசிக்கத்தான் முடிந்தது,
அதைப் பாட எனக்கு ஞானமில்லை.
அங்கு நல்ல நறுமணம் வீசியதால் என் மீது கூட பாரிஜாத வாசனை!
அங்கு நான் பேசியதை விட அந்த நறுமணத்தைத்தான் அதிகம் நுகர்ந்தேன்...
நானும் மனிதனாயிற்றே பேசத் துவங்கினேன்...
என்ன ஆச்சர்யம்!!!
அழகுத் தமிழில்!!!
அசரும்படி பேசினேன்
அதில்
அதிசயம் என்ன தெரியுமா???
நான் பேசியது உண்மையை மட்டும் தான்!!!
அது என்ன இடமோ தெரியவில்லை,
அங்கு உழைக்கவே வழி இல்லை,
ஆனால் ஓசிச் சோறு சுடச் சுட...
அருமையான சாம்பாரு,
அதுகூடவே இரசமும் சோறு,
அப்பளம், கூட்டு, பொரியல் கூட
அல்வா இலையில் நெய்யில் ஆட...
பாசிப்பருப்பு பாயாசம்,
ஏனோ எனக்கு ஒன்னும் புரியவில்லை,
யோவ்....
எந்திரி...எந்திரி....
பார்க் பூட்ட நேரமாயிடுச்சு...
ச்சே! பாவி மகன்
தூக்கத்தில் கூட நிம்மதியாயிருக்க விடமாட்டிங்கறான்...
No comments:
Post a Comment